என்னதான் தொழில்பநுட்பம் வளர்ந்தாலும், ஜாதகம் பார்ப்பது முதல் ஒரு சில ஐதீக முறைகளை எல்லோருமே பின்பற்றுவது அனைவரையும் அறிந்ததே…
ஒரு சிலர் ராசியின் படி என்னென்ன நற்பலன்கள் இருக்கும் என ஆவலாக தெரிந்துக்கொள்வார்கள். ஒரு சிலர் ராசிகளுக்கு ஏற்றவாறு ஒரு சில நல்ல குண நலன்களை பெற்று இருப்பார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஜப்பானில் ஒரு புது விதமான உளவியல் ஜோதிடம் அந்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
அதன் படி, நம் பெயரின் முன்றாவது லெட்டரை வைத்து, நம் குணநலன்கள் என்ன என்பதை மிக எளிதாக புரிந்துகொள்ளலாம். அதன்படி இந்த பதிவில்,
A ,B,C எழுத்துக்களின் குணநலன்களை தெரிந்து கொள்ளலாம்…
நமது பெயரின் 3 ஆவது எழுத்து A ஆக இருந்தால்,இவர்கள் அதிக தைரியம் கொண்டவராக இருப்பார்கள். மேலும் உறுதியான மனநிலை கொண்டு இருப்பார்கள். இவர்களை வேறு யாராவது வழி நடத்தினால் கொஞ்சம் கூட பிடிக்காது. அதே போன்று எந்த ஒரு விஷயத்தில் இவர்கள் இறங்கினாலும், அந்த விஷயம் இவர்கள் நினைத்தது போலவே நடக்க வேண்டும் என்பதால் தெளிவாக இருப்பார்கள்.
B: பெயரில் மூன்றாவது எழுத்தை B ஆக இருந்தால், இவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவும் செய்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் சுயநமலாக நடந்துகொள்ளும் நபராக இருப்பார்கள். இவர்களுக்கு எவ்வளவு கிடைத்தாலும்,மனநிறைவே அடைய மாட்டார்கள்.மேலும் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள்.மேலும் வாழ்க்கையில் எந்த விதமான சென்டிமெண்டுக்கும், எமோஷனுக்கும், பீலிங்ஸ் இவை எதுக்குமே கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டார்கள்.
ஏதாவது நடக்க இருந்தால், அதனை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சில ஆற்றலை பெற்று இருப்பார்கள்.மேலும் இவர்களை தங்கள் பேச்சால் வெல்லவே முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவர் இவர்.