விஜய்-அட்லீ படத்தில் வாய்ப்பு உள்ளதா?

679

விஜய்-அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்கள். அந்த படம் குறித்து நாளுக்கு நாள் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

சமீபத்தில் படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. பூஜையின் போது வந்த விஜய் புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளார்கள். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரோபோ ஷங்கரின் மகள் கமிட்டாகி இருப்பதாக செய்திகள் வந்தது.

இந்த நிலையில் ரோபோ ஷங்கரின் மனைவி ஒரு பேட்டியில், என் மகள் செய்த டப்ஸ்மேஷ் வீடியோக்களை பார்த்த அட்லீ சார் குழுவினர் ஆடிஷனுக்கு வர கூறினார்கள். என் மகளும் நன்றாக நடித்துக் காட்டினால், 80% எல்லாம் ஓகே இன்னும் 20% காத்திருக்கிறோம். நல்ல செய்தியாக வரும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE