சட்டவிரோத மீன்பிடி நடவக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கிழக்கு கடற்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமே இவ்வாறு தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கடற்பகுதியில் குறித்த தடை செய்யப்பட்ட மீடிபிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ள. 150 அடி நீளமுடை சுமார் 37 வலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு கடல்வள பிரதி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.