கேள்வி:- உங்கள் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்று நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றது பா.அரியநேந்திரன் அவர்கள் பாராளுமன்றத்தில் போட்டியிட்டு அவர் வெல்லவில்லை. மக்கள் மத்தியிலே ஏனையவருக்கு ஆதரவு இருக்கின்றது. என்ற ஒரு குற்றச்சாட்டு சுமந்தப்பட்டிருக்கின்றது. நீங்கள் கடந்த காலத்தில் இந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிக் கொண்டதன் காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள் மக்களுக்கு நீங்கள் சேவை செய்யவில்லை என்றா? அல்லது கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் இருக்கின்ற பொழுது அபிவிருத்திகளை மக்களுக்கு நீங்கள் செய்யவில்லை என்றா? இதற்கான காரணம் என்ன?
பதில்:- முதலாவது முறையாக நான் 2004ம் ஆண்டு முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டடேன் இதிலே எனக்கு கிடைத்த வாக்குகள் முப்பத்தொராயிரத்து ஐநூற்று. வாக்குகள் கிடைக்கப்பெற்றது அதன் மூலம் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். இரண்டாவது முறையாக 2010ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலிலே பதினாறாயித்து ஐநூற்று நான்கு வாக்குகள் கிடைத்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். மூன்றாவது முறையாக 2015ம் ஆண்டு இருபத்தொராயிரத்து முந்நூற்று நான்கு வாக்குகள் பெற்று நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவில்லை.
இந்த தேர்தல் முறையில் இருக்கின்ற விடையம் விகிதாசார தேர்தல் முறையில் நாங்கள் மட்டக்களப்பிலே எட்டுப் பேர் போட்டியிடுவது வழமை. எடுக்கின்ற மொத்த வாக்குகளில் யார் அந்த முழுமைக்கு வருகின்றார்களோ அவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள். இந்த தேர்தலில் நடைபெற்றது என்னவென்றால் நாங்கள் புதியவர்களையும் பலரையும் இணைந்திருந்தோம். மக்கள் மத்தியிலே யாராவது மூன்று பேர் வரத்தான் வேண்டும். இந்தக் கேள்வியை இன்நொரு பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டாளும் இதே விடை தான் கிடைக்கும். மூன்று பேர் தான் தெரிவு செய்யப்படுவார்களாக இருந்தாள் அதனை நாங்கள் மனசார ஏற்றுக்கொள்ளவேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் நான் எல்லாத் தேர்தல்களிலும் நான் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன் நான் தேர்தல் பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் எனது இலக்கத்திற்கு கீழ் வாக்களியுங்கள் என்று எவருக்கும் கூறவில்லை. அது எனது இலட்சியம் எனக்கு வாக்கழிக்காவிட்டாலும் கட்சிக்கு வாக்கழியுங்கள் என்று கூறியிருந்தேன். இதிலே இன்னொரு விடையம் 2015ம் ஆண்டு ஒருலட்சத்து முப்பத்தையாயிரம் வாக்குகள் நாங்கள பெற்றிருந்தொம். 2010ம் ஆண்டு அறுபதுக்கும் எழுபதுக்கும் இடையில் தான் வாக்குகளைப் பெற்றிருந்தொம். இந்த வீதாசார தேர்தல் முறையிலே வாக்குகளை அதிகம் எடுத்தாலும் அடுத்த நிலையிலே உள்ள ஒரு கட்சி வரும். நிச்சயமாக கூடுதல் வாக்கு எடுக்கின்றவர்களுக்கு மூன்று ஆசனம் கிடைத்துவிடும் சிலர் தெரியாமல் கூறுகின்றார்கள்.
இரண்டு ஆசனம் என்று அப்படி இரண்டு ஆசனம் என்று இல்லை.
எனது நண்பர் ஒருவர் கூறியிருந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனம் தான் கிடைக்கும் என்று நான் சொன்னேன் இல்லை கிடைப்பதாக இருந்தால் ஒன்று கிடைக்கவேண்டும் என்று அல்லது மூன்று கிடைக்கவேண்டும். இரண்டு கிடைத்தால் விகிதாசார தேர்தல் முறை அப்படியில்லை என்று கூறியிருந்தேன். நான் இன்னும் வெளிப்படையாகக் கூறுவேண்டுமாக இருந்தால் எனது சேவையை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இது தான் உண்மை.
கேள்வி:- அப்படியாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புளொட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றிருக்கின்றார் தானே அப்படியாக இருந்தால் புளொட் அமைப்பு இந்த பகுதிகளில் என்ன செய்திருக்கின்றது.?
பதில்:- என்னைப் பொறுத்தமட்டில் அவர் புளொட் அமைப்பிலே எலக்சன் கேட்டவர் தான் ஆனால் அவர் புளொட் உறுப்பினர் இல்லை. T.M.P.P உறுப்பினர். T.M.P.Pஅமைப்பிலே கல்விக்குப் பொறுப்பாள இருந்தவர் முன்னால் முதலமைச்சர் சந்திரகாந்தன் கட்சியிலே அவர் ஒரு கல்வி நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தவர். ஆனால் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற இந்த பங்காளிக் கட்சிகள் யாரைப் பிடிக்கலாம் என்று அதான் புளொட் விட்ட பிழை என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் அங்கிருந்து வந்து இங்கிருக்கின்ற மக்களிடமோ எவரிடமுமோ ஆலோசனை கேட்கவில்லை. நான் தருகின்றவரை நீங்கள் நியமிக்கவேண்டும் என்ற அந்த கட்டாயத்தில் அவர் புளொட் தலைமையை அவர் அணுகியிருந்தால் அவர்கள் நியமித்துத் தான் அவர் இதிலே வந்திருந்தார். என்னைப் பொறுத்தமட்டடில் நான் அவரை புளொட் உறுப்பினராக கருதவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் இலங்கை தமிழரசுக் கட்சி இப்பொழுது ரெலோ இருக்கின்றது, புளொட் இருக்கின்றது. அந்தந்தக் கட்சிகள் தேர்தல் வருகின்ற பொழுது உதாரணமாக நாங்கள் எத்தனை வேட்பாளர்களை நாங்கள் நியமிக்கவேண்டும் என்பதனை நாங்கள் முதலிலே முடிவெடுப்போம். இந்த வேட்பாளர்களில் எத்தனை இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எத்தனை ரெலோ உறுப்பினர்கள், புளொட் உறுப்பினர்கள் என்று ஒரு பங்கீடுகளை தலைமை செய்கின்ற பொழுது அந்த பங்கீடுகளுக்கு ஏற்றதாக வேற்பாளர்களை நியமிக்கின்றபொழுது அவை ஒட்டு மொத்தமாக அவர்களை ஏற்றுக் கொண்டது தான் அந்த தீர்மானம் அது தான் வழமை.
கேள்வி:- எதிர்வரும் காலங்களில் மாகானசபை தேர்தல்களிலோ அல்லது பாராளுமன்றத் தேர்தலிலோ நீங்கள் போட்டியிடுவீர்களா?
பதில்:- நிச்சயமாக என்னைப் பொறுத்தமட்டில் நான் எப்பொழுதுமே கட்சி ரீதியாக கட்சி எடுக்கின்ற முடிவுக்கு நான் கட்டுப் படுகின்றவன் கட்சி தொடர்பாக எந்த தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று கேட்கின்ற பொழுது அதனை ஏற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு நான் முடிவு எடுப்பேன்.
கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நகர்வுகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வுத் திட்டத்துக்கு முரணாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது .என்று பல கட்சிகளால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையிலே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்திற்குரிய நகர்வினை எவ்வாறு மேற்கொண்டு செல்கின்றது. அது எவ்வாறு சாத்தியப்படும் ?
பதில்:- நிச்சயமாக இப்பொழுதும் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். சம்பந்தன் ஐயா தெளிவாக ஐரோப்பிய ஒன்றிய யூனியன் பாராளுமன்ற பிரதி நிதியிடமும் அதைத் தான் கூறியிருந்தார். எப்பொழுதும் நாங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் இந்த நம்பிக்கை என்பதை. நான் இன்றொரு விடையத்தை மேலதிகமாகச் சொல்கின்றேன். சம்பந்தன் ஐயா தீபாவளிக்கு தீர்வு வரும் பொங்களுக்கு தீர்வு வரும் என்றெல்லாம் கூறியதாக பலர் கூறுகின்றார்கள். நிச்சயமாக அப்படிக் கூறுபவரால் தான் தலைவராக நிற்கலாம். அது ஏன் கூறுகின்ற விடையம் என்றால் மக்களை நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டு செல்லக் கூடியவர்கள் தான் தலைவருக்கு வரவேண்டும். ஆகவே நம்பிக்கை அற்றவர்களாக மக்களை மாற்றிவிட முடியாது. மக்களை நம்பிக்கையற்றவராக வைக்கவேண்டுமாக இருந்தால் உதாரணமாக பொங்களுக்கும் தீர்வு வராது, தீபாவளிக்கும் தீர்வு வராது என்று சொன்னால் தொண்டர்கள், மக்கள் என்ன செய்வார்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகுவார்கள், நம்பிக்கையில்லாமல் போவார்கள் அந்த நம்பிக்கை நிமித்தமாகத் தான் கூறப்பட்டது.
இது எல்லா அரசியல் கட்சிக்கு மாத்திரமல்ல விடுதலை இயக்கங்களுக்கும் இருந்தது. எங்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கமும் நம்பிக்கை ஊட்டுகின்ற விடையத்தைக் கூறியிருந்தார்கள். 1990ம் ஆண்டு கிடைக்கும் விடுதலை என்று தளபதிமார் எங்களுக்கு கூறினார்கள். நீங்கள் பயப்படாதீர்கள் அடுத்த ஆண்டு எங்களுக்கு விடுதலை கிடக்கும் என்று கூறினார்கள். இது எல்லா இடத்திலும் கூறப்பட்ட விடையம். இது தாண் கடைசி அடி என்ற பாடலைப் படித்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள். நம்பிக்கை ஊட்டுவதென்பது அது தலைமைத்துவத்தின் பண்புகளில் ஒன்று அது யாராக இருந்தாலும் விடுதலை இயக்கமாக இருக்கலாம், அரசியல் கட்சியாகவும். இருக்கலாம்.
கேள்வி:- அதாவது யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதிகளிலே தமிழ் மக்களுடைய விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் ஜனநாயகமான ரீதியிலே இந்த நாடு சென்று கொண்டிருக்கின்றது போராட்டம் இல்லை. நீங்கள் கூறுவது போராட்டம் இருந்த காலகட்டத்திலே நம்பிக்கையூட்டும் நிகழ்வு அப்படியாக இருக்கின்ற பொழுது இந்த போராட்டம் முடிவடைந்து சரியான ஒரு தீர்வுத்திட்டத்திற்கு வரவில்லையென்று சொன்னால் முழுப் பூசனிக்காயை சோத்துக்குள் புதைக்கும் ஒரு நிகழ்வாகத் தானே பார்க்கப்படுகின்றது.
பதில்:- ஒரு நாளும் இல்லை முழுப் பூசனிக்காயை சோத்துக்குள் புதைப்பதற்கான பலர் கூறுகின்ற ஒரு கருத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கொண்ட அந்த குரோதத் தண்மையை வெளிக்காட்டுவதற்காக சில ஊடகவியலாளர்களும் அதைத்தான் சொன்னார்கள் அதல்ல கருத்து நம்பிக்கை என்பது விடுதலை இயக்கமாக இருக்கலாம், அல்லது அரசியல் கட்சிகளாக இருக்கலம் நம்பிக்கை ஊட்டவேண்டிய தேவை அந்த அரசியல் கட்சிக்கு இருக்கின்றது அதைத் தான் நான் சொல்லுகின்றேன். சம்பந்தன் ஐயா என்ன சாத்திரியா சிறிலங்கா அரசாங்கத்துடன் ஏழுபது வருடமாக இருந்த தலைமையுடன் தந்தை செல்வா பேசி பெறாத தீர்வை தலைவர் பிரபாகரன் அவர்கள் முப்படைகளையும் நடத்தி ஆயுதம் ஏந்திப் போராடி பெறாத தீர்வை சம்பந்த ஐயா எவ்வாறு தரமுடியும்? அதனைப் பேசித் தானே பெறமுடியும். அதை பேசுவதன் மூலம் இரண்டு விடையங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் தியாகத்தால் கிடைத்த பலன் என்னவென்றால் சர்வதேச ரீதியில் எங்களது போராட்டம் வெற்றி பெற்றிருக்கின்றது. சர்வதேசத்தின் ஊடான அந்த அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுத்துச் செல்கின்றது. ஆகவே இது விடுதலை என்பது பல நாடுகளிலே உங்களுக்குத் தெரியும் நூறு வருடம் சென்றிருக்கின்றது, இருநூறு வருடம் சென்றிருக்கின்றது, ஐம்பது வருடம் சென்றிருக்கின்றது. விடுதலை என்பது கிடைத்தே ஆகும் அதனை நான் உறுதியாகக் கூறுகின்றேன். அதனால் அது கிடைக்கும் வரை தமிழ் மக்களை நம்பிக்கையோடு வைத்திருக்கவேண்டும் அந்தந்த காலகட்டத்தில் வருகின்ற தலைமைகள் வைத்திருக்கவேண்டியது அவர்களின் பொறுப்பு. இன்று சம்பந்தன் ஐயா இருப்பார் நாளை இன்னொருவர் வருவார். ஆனால் அந்த தலைமை என்பது மக்களை உறுதியாக வழி நடத்தக் கூடிய தலைமைகளை வடகிழக்கு மக்கள் தொடர்ச்சியாக ஆதரித்தால் மாத்திரம் தான் எங்களுக்கு விடுதலை கிடைக்கும். அல்லது காலத்துக்கு ஏற்றமாதிரி சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி நாங்கள் அபிவிருத்திக்குப் போவோமாக இருந்தால் மக்கள் அபிவிருத்திக்கு எல்லோரும் போய்விடுவார்கள். ஆகவே ஏதோவொரு விதத்தில் விடுதலை என்பது மங்கிப் போய்விடும் அந்த மங்களான நிலைக்கு விடக்கூடாது. அதனை உறுதியாகக் கொண்டு செல்லக் கூடிய தலைமை எங்களுக்குத் தேவை அதைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்து கொண்டிருக்கின்றது. அது தான் உண்மை.
கேள்வி:- உங்களைப் பொறுத்தவரையில் தீர்வுத் திட்டம் எப்பொழுது சாத்தியமாகும், அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு எப்படிக் கிடைக்கும் என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவீர்கள்?
பதில்:- உண்மையில் இந்த தீர்வு என்பது எப்பொழுது கிடைக்கும் என்பது தெரியாது. கிடைக்கும் என்பது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் அது எந்தக் காலம், எந்த ஆண்டு, யார் தலைமையில் கிடைக்கும் என்பதற்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது ஆனால் அது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.
‘நன்றி’