முன்னணி தமிழ் ஹீரோவின் படத்தில் கமிட் ஆகிய அனிகா

486

நடிகை அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித்-நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது வசூல் சாதனை படைத்து வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித்-அனிகா கெமிஸ்ட்ரி பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மற்றொரு  முன்னணி தமிழ் ஹீரோவின் படத்தில் கமிட் ஆகியுள்ளேன் என அனிகா கூறியுள்ளார். ஆனால் அது எந்த நடிகர் என்பதை கூற மறுத்துவிட்டார் அனிகா. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது கேரளாவின் ஆலப்புழாவில் நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.

அவர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் தான் நடித்து வருகிறார் என தகவல்கள் ஒருபுறம் பரவி வருகிறது.

SHARE