தம்புள்ளை – குருநாகல் வீதியில் லொறி ஒன்று பஸ் ஒன்றுடன் மோதுண்டதில் 05 பேர் காயமடைந்த நிலையில் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறி தனது கட்டுபாட்டை இழந்து அதிவேகமாக சென்றமையால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பஸ்ஸில் பயணித்த 05 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.