அஜித் படத்திலிருந்து விலகிய நஸ்ரியா

160

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் பாலிவுட்டில் செம்ம ஹிட் அடித்த பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அஜித் இதில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார், டாப்ஸி கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கமிட் ஆனது நஸ்ரியா தானாம்.

ஆனால், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, இதிலிருந்து நஸ்ரியா விலக, தற்போது ஷரதா ஸ்ரீநாத் கமிட் ஆகியுள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் நஸ்ரியா எப்போதும் ஹோம்லியாகவே நடிப்பவர், இப்படத்தில் இவரிடம் ‘நீங்கள் விர்ஜினாக இருக்கிறீர்களா?’ போன்றெல்லாம் கேள்வி கேட்பார்களாம்.

அதன் காரணமாகவே நஸ்ரியா இதிலிருந்து விலகியிருக்க கூடும் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

SHARE