13.11 கோடி ரூபாய் கொடுத்து அபார்ட்மெண்ட் வாங்கிய ஆலியா பட்

113

நடிகர்கள் கோடி கோடியாக சம்பளமாக வாங்குவதால் அவர்கள் வீடு மற்றும் கார் என மிக சொகுசான வாழ்க்கை தான் வாழ்கிறார்கள். அதற்காக அவர்கள் செலவழிக்கும் தொகை மிக பெரியதாக தான் இருக்கிறது.

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்க வந்து 6 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவர் ஏற்கனவே மும்பையில் 2 வீடுகள் வைத்துள்ளார். அது போதாது என தற்போது ஜூஹூ பகுதியில் மூன்றாவதாக ஒரு சொகுசு அபார்ட்மெண்டை வாங்கியுள்ளார்.

2,300 சதுர அடி கொண்ட அந்த அபார்ட்மெண்ட் 13.11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் நடிகை. ஆனால் சாதாரணமாக 7.86 கோடி மட்டுமே அதன் விலை. ஆலியாவிற்காக சில மாற்றங்கள் செய்து இவ்வளவு அதிக விலைக்கு விற்றுள்ளனர்.

View this post on Instagram

Gully Day ? ?@thehouseofpixels

A post shared by Alia ? (@aliaabhatt) on

 

SHARE