தமிழ் சினிமாவில் வித்தியாசம் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர்.

109

தமிழ் சினிமாவில் வித்தியாசம் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர் இயக்குனர் பார்த்திபன். நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் எந்த மேடைக்கு சென்றாலும் தனியாக தெரியும்படியாக பேசுவார்.

எப்போதும் வித்தியாசமான ஒரு பரிசை தான் யாருக்கும் தருவார். இவரை தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத்தலைவராக சமீபத்தில் நியமித்தனர். இதையடுத்து இளையராஜா 75 விழாவுக்கு பல ஏற்பாடுகளை செய்தார்.

ஆனால் சில மனக்கசப்பால் அதிலிருந்து விலகினார். அந்த விழாவுக்கு கூட செல்லவில்லை.

இந்நிலையில் இந்த விழாவை பற்றி விஷால் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், பார்த்திபனின் பங்கு மிகப்பெரியது. அவர் புதிய வரலாற்றையே உருவாக்கிவிட்டார். ஏ.ஆர் ரஹ்மானையும், இளையராஜாவையும் ஒரே மேடையில் நிற்க வைத்த பெருமை அவருக்கு மட்டுமே உரியது என்றார்.

அம்பானி வீட்டு விழாவில் கூட இது சாத்தியமில்லாதது என்று கூறியுள்ளார்.

View image on Twitter

R.Parthiban

@rparthiepan

Msv மறைவிற்கு பின் ராஜா ஒரு நிகழ்ச்சி நடத்தி Msv புகழ் பாடினார்!அன்றிரவே நான் A R R -யிடம் விண்ணப்பம் வைத்தேன் உங்களின் தலைமையில் இளையராஜாவுக்கு கௌரவம் செய்ய வேண்டும் என்று!
இரு விருது பெற்ற ஒரு விழுது
இசை விருட்சத்தை வணங்கி வாழ்த்தியதில் நான் கொஞ்சமாய் செத்துதான் போனேன்!

SHARE