எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்த தேன்

243

சித்த மருத்துவத்தில் தேனுக்கு என்றே தனிச்சிறப்பே உள்ளது.

தேனில் எண்ணற்ற மருத்துவப்பயன்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலாகும்.

புற்றுநோய் முதல் ஆஸ்துமா வரை உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களுக்கும் சிறந்த நிவராணியாக திகழ்கின்றது.

மேலும் இது ஓர் இயற்கை சுவையூட்டி என்பதால், சர்க்கரைக்கு பதிலாக இவற்றை உணவுப் பொருட்களில் கலந்து உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லப்படுகின்றது.

அதுமட்டுமின்றி குறிப்பாக தேனை ஒருசில பொருளுடன் கலந்து குடித்து வருவதால், உடலின் பல பிரச்சனைகள் குணமாகும். அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.

  • இரவில் படுக்கும் முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வருவதோடு, இதயமும் பலம் பெறும்.
  • பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, அத்துடன் தேன் கலந்து குடித்தால், உடலின் சக்தி அதிகரிக்கும்.
  • எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து குடித்து வர, இருமல் பிரச்சனை நீங்கும்.
  • மாதுளையை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, அத்துடன் தேன் கலந்து குடித்து வர, உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
  • தேனை சுடுநீருடன் கலந்து சாப்பிட்டால், ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பித்தம் நீங்கும்.
  • ரோஜாப்பூவை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான சூடு குறையும்.
  • நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்து வர, இன்சுலின் சுரப்பு அதிகமாகும்.
  • தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்தால், குடல் புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
  • கேரட் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
  • ஆரஞ்சு பழச்சாற்றுடன சேர்த்து கலந்து குடித்து வர, இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

SHARE