எத்தனை நடிகைகள் வந்தாலும் நடிகை பாவனாவை ரசிகர்கள் யாரும் மறக்கமாட்டார்கள். மலையாளத்திலிருந்து வந்த அவரை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினார்கள்.
சித்திரம் பேசுதடி தான் அவரின் முதல் தமிழ் படம். வெயில், தீபாவளி என சில படங்களில் நடித்திருந்தாலும் அஜித்துடன் நடித்த அசல் படமே அவருக்கு தமிழில் கடைசியாக வந்தது.
பின்னர் மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து வந்தவர் கடந்த வருடம் தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது முதல் வருட திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். தன் கணவருடன் ஜோடியாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் டிவிட்டரில் பலரின் பார்வைகளை ஈர்த்துள்ளது.
திருமணத்திற்கு பின் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு சினிஉலகத்தின் சார்பாக திருமண நாள் வாழ்த்துக்கள்.
https://twitter.com/Bhavana_offl/status/1092302177505177600