இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள அமெரிக்கா, மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.

405

 

இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள அமெரிக்கா, மைத்திரிபால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளிவிவகார உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கை மக்கள் புதிய அரசாங்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்கிறார்களோ அதனையே நாங்களும் எதிர்பார்க்கிறோம். இலங்கை மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை புதிய அரசு நிறைவேற்றுவதற்கு நாங்கள் ஆதரவளிக்க விரும்புகின்றோம். புதிய அரசாங்கம் ஆரம்ப நாட்களில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இலங்கையில் ஜனநாயகம் தொடர்பாக வழங்கப்பட்ட உறுதியான தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிபொறுப்பை ஏற்று, தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றதொடங்கியுள்ளது. நாங்கள் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம் .-என அவர் தெரிவித்துள்ளார். –

SHARE