
* குளிர்காலத்தில் கிரீம்களை காலை வேளையில் பயன்படுத்தினால், அவற்றால் சருமம் நன்கு ஈரப்பசையுடன் இருப்பதோடு, அழுக்குகளை எளிதில் உறிஞ்சிவிடும். இறுதியில் சருமத்தில் பிம்பிள் ஏற்பட்டு, பெரும் வலி உண்டாகும். ஆகவே இவற்றிற்கு பதிலாக கோல்டு கிரீம்களை இரவில் படுக்கும் முன்பு சருமத்தில் ஃபேஸ் மாஸ்க் போன்று தடவி, இரவு முழுவதும் ஊற வைத்தால், மறுநாள் சருமம் நன்கு மென்மையோடு பொலிவாக காணப்படும்.
* உதடு அடிக்கடி வறட்சியடையும் என்பதற்காக பயன்படுத்தும் லிப் பாம் போன்றும், கோல்டு கிரீம்களை பயன்படுத்தலாம். இதனால் உதட்டில் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட காயங்கள் அனைத்தும் போய்விடும்.
* அதிக குளிர்ச்சியின் காரணமாக, முழங்கால் மற்றும் முழங்கைகளில் ஒருவித சுருக்கங்கள் போன்று காணப்படும். இத்தகைய பிரச்சனை ஏற்படாமல் தடுக்க, கோல்டு கிரீம்களை தடவி வந்தால், தடுக்கலாம்.
* அதிக களைப்பின் காரணமாக முகத்திற்கு போட்ட மேக்-கப்பை பொறுமையாக நீக்க முடியவில்லையெனில் அல்லது எங்கேனும் வெளியே செல்லும் போது மேக்-கப் ரிமூவரை எடுத்து செல்லவில்லை என்றால், அப்போது அவசரத்திற்கு கோல்டு கிரீம்களை பயன்படுத்தி நீக்கலாம். அதற்காக இவற்றை பயன்படுத்தி அடிக்கடி நீக்கக் கூடாது. இது வெறும் அவசரத்திற்கு மட்டும் தான்.
* குளிர்காலத்தில் குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே வெடிப்புகள் வர ஆரம்பிக்கும் போதே கோல்டு கிரீம்களை பயன்படுத்தினால், வெடிப்புகள் வராமல் தடுக்கலாம். ஆனால் அந்த வெடிப்புகள் பெரியதாக இருந்தால், அப்போது அவற்றிற்கு நிச்சயம் வெடிப்பை சரிசெய்ய விற்கும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும்.
* நிறைய பெண்கள் முகத்திற்கு கிரீம்கள் மற்றும் மற்ற உறுப்புகளுக்கு லோசன் என்று பயன்படுத்துவார்கள். ஒரு வேளை அவை இல்லாவிட்டால், அப்போது இந்த கோல்டு கிரீம்களை எல்லா இடங்களுக்குமே பயன்படுத்தலாம்.
* வேக்ஸ் செய்த பின்னர் எப்போதும் அதிக வலி இருக்கும். அதிலும் குளிர்காலத்தில் என்றால் அது பெரும் தொல்லையாக இருக்கும். ஆகவே அந்த மாதிரி வேக்ஸ் செய்த பின்னர் ஏற்படும் வலியை குறைக்க, கோல்டு கிரீம்களை பயன்படுத்தினால், வேக்ஸினால் ஏற்படும் வலியானது தடுக்கப்படும்.