75 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

383

இலங்கை அரசாங்கத்துக்கும் – பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் French Agency for Development (AFD) பிரிவுக்குமிடையில் 75 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரத்மலானை மொரட்டுவ பகுதிகளில் கழிவுநீரை அகற்றுவதற்கான திட்டத்தின் முதற்கட்டத்தில் இரண்டாவது பிரிவு நடவடிக்கைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த உடன்படிக்கையில் நிதி மற்றும் ஊடகதுறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் பிரிவின் இலங்கைக்கான பணிப்பாளரும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவருமான மார்டின் பேரன்ட்; (Martin Parent) ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

SHARE