மூக்கடைப்பு சரியாக என்ன செய்வது

249

பொதுவாக அனைவருக்கு மழை காலம் வந்து விட்டாலே போது சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜலதோஷமும் சேர்ந்தே வந்துவிடும்.

.இதனால் இரவில் மூக்கடைப்பு ஏற்பட்டு நிம்மதியாக தூங்க கூட முடியாது. இதனால் ஒவ்வொரு நாளும் அவதிப்படுவதுண்டு.

இதற்கு உப்பு கலந்த நீரை மூக்கின் ஒரு துவாரத்தின் வழியாக ஊற்றினால் மூக்கடைப்பு சரியாகி சளியும் சேர்ந்து வெளியேறி விடும்.

தற்போது இந்த எளிய செய்முறையை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • சலைன் பவுட்
  • வெது வெதுப்பான நீர்
  • அயோடின் கலக்காத உப்பு
  • பேக்கிங் சோடா
செய்முறை

முதலில் சலைன் பவுடரை எடுத்து 1-2 கப் வெதுவெதுப்பான நீரில் கலக்க வேண்டும். இதை கொதிக்க வைக்கும் போது தொற்று சரியாகி விடும்.

இதனுடன் 1/4 – 1/2 டீ ஸ்பூன் அயோடின் கலக்காத உப்பு மற்றும் சிறுதளவு பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்.

மூக்கில் ஊற்ற நெட்டி பாட் அல்லது ஊசியை பயன்படுத்தலாம்.

தலையை 45 டிகிரி கோணத்தில் சாய்த்து வைத்துக் கொண்டு மூக்கின் ஒரு துவாரத்தின் வழியாக சலைன் நீரை விடுங்கள். உடனே தலையை கவிழ்க்க வேண்டாம்.

பின் நெட்டி பாட்டிலின் நுனி உங்கள் மூக்கு துவாரத்தில் இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள்.

வாயை திறந்த நிலையில் வைத்துக் கொண்டு பாட்டிலை அல்லது ஊசியை அழுத்துங்கள்.

மூக்கினால் மூச்சுவிட்டால் திரவம் வெளியேறிவிடும். எனவே வாயைக் கொண்டு மூச்சு விடவும்.

இந்த உப்பு கலந்த நீர் நம் சுவாசப் பாதை வழியாக சென்று சுவாதி பாதையை சுத்தமாக்கி விடும்.

வாய் வழியாக வரும் போது அந்த நீரை துப்பி விடுங்கள்.

இப்பொழுது மூக்கை நன்றாக சீந்தி விட்டு மறுபடியும் இந்த முறையை செய்யுங்கள்.

இப்படி செய்யும் போது உங்கள் சுவாச பாதை சுத்தமாகி சீக்கிரம் சளி வெளியேறி விடும். மூக்கடைப்பு தொந்தரவும் இனி இருக்காது.

1-2 முறை பயன்படுத்தும் போதே நல்ல பலன் கிடைக்கும். திரும்பவும் பயன்படுத்தும் போது மூக்கடைப்பு, சளி தொல்லை, சைனஸ் பிரச்சினை சரியாகி விடும்.

முக்கிய குறிப்பு

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரும் சலதோஷ பிரச்சினைகளை சரி செய்கிறது. காது தொற்று உள்ளவர்கள், மூச்சு விட ரெம்ப சிரமப்படுபவர்கள் இதை செய்ய வேண்டாம்.

SHARE