கறுப்பு முள்ளங்கி ஏராளமான மருத்துவ குணங்களுடன் இருந்தாலும், அதை நாம் எப்படி பயன்படுத்தினால் என்ன பயன்கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
கறுப்பு முள்ளங்கியில், உடலுக்கு தேவையான ஆந்தோசயனின், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பொருட்கள் உள்ளன.
இதில் விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச் சத்து, மக்னீசியம், சல்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இந்த கறுப்பு முள்ளங்கி குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிக்கிறது.
இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் ஜூஸ் போட்டு குடிப்பதனால், இருமலை நொடியில் போக்குகின்றது. தற்போது இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
கறுப்பு முள்ளங்கி – 1
தேன் – 50 மில்லி
சர்க்கரை – 50 கிராம்
செய்முறை
கறுப்பு முள்ளங்கியை எடுத்து அதில் சிறுதளவு தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து பயன்படுத்த போகிறோம்
முதலில் ஒரு மீடிய வடிவ முள்ளங்கியை எடுத்து தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டி கொள்ளுங்கள்.
இப்பொழுது அதை கத்தியை கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும். அதில் தேன் மற்றும் சர்க்கரை கலந்து ஒன்றாக கலக்கவும்
இதை அப்படியே 12 மணி நேரம் இரவு முழுவதும் ஊற வையுங்கள். பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டாம்.
12 மணி நேரம் கழித்து முள்ளங்கியில் உள்ள நீர்ச்சத்து இறங்கி முள்ளங்கி ஜூஸ் கிடைக்கும். இதை ஒரு கிளாஸில் நிரப்பிக் கொள்ளுங்கள்.
இந்த சாற்றை குடித்து வந்தால் சீக்கிரமே ஜலதோஷம் மற்றும் இருமல் சரியாகி விடும்.