நடிகர் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் கேரியரை துவங்கி பின்னர் சினிமாவுக்கு வந்து தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர்.
அவருடன் ஜோடியாக நடிக்க ஆசையிருப்பதாக நடிகை தமன்னா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “சிவகார்த்திகேயன் டிவியில் இருந்து ஹீரோவாக வளர்ந்த ஜர்னி எனக்கு பிடிக்கும், அவர் படங்களும் பிடிக்கும். அவருடன் நடிக்க அதிக விருப்பம் உள்ளது” என தமன்னா தெரிவித்துள்ளார்.
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என பலருடனும் நடித்துவிட்ட தமன்னா தற்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஆசைப்படுவது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.