தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத்சிங். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற ராட்சசன் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை இழந்தவருக்கு நாகசைத்தன்யாவுடன் வெங்கி மாமா என்ற பட வாய்ப்பும் தவறியது.
இதனால் மிகவும் சோகமாக இருப்பவருக்கு சற்று ஆறுதல் தரும் விஷயமாக அவரது வீட்டில் இருந்து ரகுலின் தம்பி அமன் புதிய படமொன்றில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.
இந்த படத்தில் அமனுக்கு ஜோடியாக புதுமுகம் மோனிகா சர்மா நடிக்கவுள்ளார். ரஜினி பிலிம் கார்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் ரகுல், தம்பியை நடிக்க வைப்பது மட்டுமில்லாமல் ஜிம் பிசினஸும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.