நடிகை குஷ்பூ சினிமாவில் ஒரு நேரத்தில் உச்சத்தில் இருந்தவர். ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அத்தனை முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். அவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய நிகழ்வும் உண்டு.
அவரின் ஸ்டைலை ஃபாலோவ் பண்ண பெண்களும் உண்டு. வயதாகிவிட்டாலும் தற்போது சின்னத்திரை சீரியலான லக்ஷ்மி ஸ்டோரில் நடித்து வருகிறார். இயக்குனர் சுந்தர்.சி ஐ திருமணம் முடித்து தன் இருமகள்களுடன் வாழ்ந்து வருகிறார். அதே வேளையில் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
டிவிட்டரில் தற்போது மேக்கப் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் அவரின் அழகை வருணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள். மற்ற நடிகைகள் மேக்கப் இல்லாமல் இருந்தால் கண்டபடி விமர்சிக்கும் வேளையில் சீனியர் நடிகையான குஷ்பூவை மட்டும் அவர்கள் வாழ்த்தியது ஆச்சர்யமான ஒன்றே.
#nomakeup #nofilter #Raw #confidence I am not a stranger to it..?❤️ pic.twitter.com/RLkhD1koCz
— KhushbuSundar or NakhatKhan for sanghi fools❤️❤️❤️ (@khushsundar) February 24, 2019