18 மணிநேர நீர் விநியோக தடை

383

கொழும்பின் அண்டிய சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 18 மணிநேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

திருத்தப்பணி காரணமாக கொழும்பை அண்டிய சில பகுதிகளில் இன்று காலை 9  மணி முதல் 18 மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், முகத்துவாரம், மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில்  திருத்தப்பணிக்காரணமாக தற்காலிக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

SHARE