சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்யும் குறளரசன்

508

டி.ராஜேந்தரின் இளைய மகனும், நடிகர் சிம்புவின் தம்பியுமான குறளரசனுக்கு வருகிற ஏப்ரல் 26-ந் தேதி சென்னையில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
குரளரசன் இஸ்லாமிய பெண் ஒருரை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், தனது பெற்றோர் சம்மதத்துடன் அவர் சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இதுகுறித்து குறளரசனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
ஏப்ரல் 26-ல் எனக்கு திருமணம் என்பதில் உண்மையில்லை. ஆனால் நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன். எனது திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அண்ணன் சிம்புவுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்வது பற்றி கேட்டதற்கு, புன்முறுவலுடன் பதிலளித்த குறளரசன், எனக்கு திருமணம் நடந்து முடிந்தால், அடுத்து அனைவரது கவனமும் சிம்புவின் பக்கம் திரும்பும். எனவே திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து அவருக்கு வேறு வழி இருக்காது. என்றார்.
குறளரசன் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE