வவுனியா சிதம்பரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு- புலிகளுடையதாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

416

 

வவுனியா சிதம்பரபுரத்தில் ஆயுதங்கள் மீட்பு
வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 1 மலைமுருகன் கோயிலுக்கு அருகில் வீட்டு வளவு ஒன்றினுள் பரல் ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை தென்னங்கன்று நடுவதற்காக குழிவெட்டியபோது பரல் ஒன்றுக்குள் ஆயுதங்கள் இருந்தமை தெரியவந்தது. இதையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கைப்பட்டதை அடுத்து பொலிஸார் அந்த பரலில் இருந்த வெடிபொருள்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட ஆயுதங்களாவன
சொட்கண் ரக துப்பாக்கி-7
ஆர்.பி.ஜி.எறிகணைகள் – 2
பரா வெளிச்சக்குண்டுகள் – 2
எம்.பி.எம்.ஜி. ரவைகள் 67

Weapons (5)

என்பன உட்பட சில வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. இந்தப் பிரதேசம் முன்னர் காட்டுப் பகுதியாகஇருந்து 2010 ஆம் ஆண்டளவிலேயே பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.இவ்வாயுதங்கள் புலிகளுடையதாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.இதன் காரணமாக இப்பகுதியில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கருதி அப்பகுதியை புல்டோசர் கொண்டு அகழ்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE