மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி படத்தில் நடித்து வரும் கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.
எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் 19-வது படமாக உருவாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.
Very happy to share that pooja of our’s next #Karthi19 was held earlier today ?? @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k @rajeevan69 pic.twitter.com/COsIKRDYsA
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 13, 2019
விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவையும், ஜெய் கலை பணிகளையும், ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது.