
`மிஸ்டர்.லோக்கல்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே சிவகார்த்திகேயனின் 15-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியிருக்கிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்த படத்திற்கு `ஹீரோ’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
More stills from #HeroPooja today?#Hero @Siva_Kartikeyan @akarjunofficial @Psmithran @thisisysr @kalyanipriyan @george_dop @_Ivana_official @dhilipaction @DoneChannel1 @gobeatroute pic.twitter.com/AQzcIN0cI9
— KJR Studios (@kjr_studios) March 13, 2019
இந்த படத்தில் சிவகார்த்திகேனுடன் இணைந்து அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன், இவானா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அரசியல் கலந்த த்ரில்லர் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்த இந்த படத்தை தயாரிக்கின்றனர்.