சினிமாவை விட சீரியல் மூலமாக ஈஸியாக பிரபலமாகி வருகின்றனா் நடிகர் நடிகைகள். அதுவும் விஜய் டிவியில் வந்தாலே போதும் வெள்ளத்திரைக்குள் நுழைந்து விடலாம். அந்தளவுக்கு பாப்புலராகி விடுகின்றனா். காதல் முதல் கல்யாணம் சீரியல் நாயகி பிரியா பவானியாகட்டும், கலக்கப்போவது யாரு புகழ் தீனாவாகட்டும், நிஷா உள்ளிட்டவா் என்று தற்போது பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
சீரியலில் நடித்தால் பிரபலமாகி விடலாம். இந்நிலையில் ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் நாயகன் கார்த்திக் தங்கையாக நடித்தவா் வைஷாலி தனிகா. இவா் நாயகியான தன் அண்ணிக்கு ஆதரவாக இருப்பார். இதன் மூலம் அனைவராலும் அதிகமாக பேசப்பட்ட வைஷாலி இவர் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் சமந்தாவிற்கு நண்பாரகாவும் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர்களுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்து வைஷாலிக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.