சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும் – நயன்தாரா

136

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்ற திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜுன்.கே.எம். இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதில் நயன்தாரா பேசும் ‘சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இல்லுமினாட்டிதான் காரணம்னு சொல்லனும்’ வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படம் மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

 

SHARE