நிறைவேற்று அதிகாரம் பெப்ரவரிமாதத்துடன் ரத்து செய்யப்படும்!

427

 

சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தனிஒரு மனிதருக்கு இந்த அளவு அதிகாரங்கள்வழங்கப்பட கூடாது.

அவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டதால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய மோசடிகளை நாம் கடந்த கால அரசாங்கத்தின் ஊடாக சந்தித்திருக்கிறோம்.

இந்த நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் உள்ள அனைத்து மேன்மையான அதிகாரங்களும் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

SHARE