உடல் எடையை குறைக்கும் கிரீன் ஜூஸ் செய்வது எப்படி

275
உடல் எடையை குறைக்கும் கிரீன் ஜூஸ்

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை – 1 கைப்பிடி
கொத்தமல்லி – 1 கைப்பிடி
புதினா – 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு

உப்பு – சிறிதளவு

செய்முறை :

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

மிக்சியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

வடிகட்டிய ஜூசுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பருகவும்.
SHARE