வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் படுகாயம்.

594

இன்று (30.01.2015) மதியம் 1.00 மணியளவில் கண்டி வீதி ஊடாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துடன்,  மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மோதுண்டதில், கிருசாந்தன் (18), சுலக்சன் (18) என்னும் இருவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  எனினும் இச்சம்பவத்தில் சிகிச்சைகள் பலனின்றி சுலக்சன் என்ற உயர்தர மாணவர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.              (தகவலும் படங்களும் ,- இ.தர்சன்)

IMG_7938 copy   6666

SHARE