‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு எதிர்ப்பு

118

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் 29-ந் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் பலதரப்பட்ட விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தரப்பினர் படத்தை கொண்டாடி வரும் வேளையில் மற்றும் சிலர் படம் குறித்து கடுமையான விமர்சினங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ‘சதுரங்க வேட்டை’ நடிகர் நட்டி நட்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூப்பர் டீலக்ஸ்’ பற்றி தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதில்,’’அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா?… விலகி நிற்க விரும்புகின்றேன் இந்த தரங்களுடன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE