
மட்டு நகர் மத்தியில் கொலைக்கு நீதி கேட்பதற்கு இரா.துரைரெட்னம் மற்றும் செல்வேந்திரனுக்கு என்ன தகுதி உண்டு. காரணம் இரா துரைரெட்னம் சகலராலும் கொலை செய்யப் பட்டவர்களுக்கும் தண்டனை வேண்டும் என்கிறார் ஆர்ப்பாட்டத்தில், நல்லது! இவரின் கொலைக்கு யாரிடம் நீதி கேட்பது, எத்தனை பெண்கள் கதறக் கதற கணவனை கொலை செய்தது மட்டுமல்லாது பெண்களை அழித்ததை உணர்வுள்ள யாரும் மறப்பார்களா? இல்லை, செய்தவை எத்தனை எத்தனை சர்வதேச விசாரணை ஒன்று வருமாக இருந்தால் இவரும் முதல் குற்றவாளி….
இவ் உரைகளுக்கு இவர்களின் உள்ளத்தின் பதில் என்ன மனச்சாட்சி சாட்சி
அடுத்து செல்வேந்திரன் இவர் யார்? கொள்கை இல்லாது பதவிக்கும் பணத்திற்கும் அலையும் பெரிய மனிதராம்… பிள்ளையான் செய்த அத்தனை கடத்தல், கொலை, கொள்ளைகளுக்கும் உயிரடன் இருக்கும் முக்கிய முதன்மைச் சாட்சி. எத்தனை தாய் இவரின் பாதங்களில் கண்ணீருடன் கதறினர் எல்லோரையும் எட்டி உதைத்து விட்டு கூட்டமைப்பின் தலைவரை துரோகி, தமிழர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் பாதகமான தலைமை என கூறி விட்டு இன்று சம்பந்தன் புகழ் பாடுவது என்ன விந்தை. இவர்கள் போன்று பலர் மறைந்துள்ளனர் விரைவில் வீதிக்கு வருவர் உண்மையை வெளிப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம். ஆயுதங்கள் மௌனித்தாலும் இனத்தின் வீரியம் மௌனிக்க வில்லை
மக்கள் போராட்டங்களில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தலை மறைவு, ஏனைய இருவரும் தொடர்ந்தும் போராட்டங்களில் மக்களுடன்….
இங்கு கூறப்பட்டவை ஆரம்பம் வரும் வாரங்கள் வடக்கு கிழக்கின் கொலைகாறர்கள் விபரம் ஆதாரத்துடன்….
இவர்களின் உரைகளையும் செய்திகளையும் சில இணையங்கள் முதன்மையாகவும் பெரிதாகவும் பிரசுரிப்பது வேதனை, காரணம் உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்றுடன் வாழும் இவர்கள் பகலில் தேசியம், இருட்டில் கொலைகாறர்களுடன் சமரசம். அவர்களின் விபரமும் விரைவில் இரட்டை முகத்துடன் வாழ்பவர்கள். காத்திருங்கள்….
கொக்கட்டுச்சோலையில் கொலைகாறர்களும் விளக்கேற்றிய துயரம்
படுகொலைக்கே காரணமானவர்களை அழைத்து விளக்கேற்றும் அசிங்கம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28வதுஆண்டு நினைவு மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.எல்லோருக்கும் தெரியும்,
தெரியாத விடயமும் இதிலே உள்ளது. 1987ம் ஆண்டு ஐனவரி மாதம் 28ம் திகதி கொக்கட்டிச்சோலை பகுதி முழுமையான விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது 1986ம் ஆண்டு.
ஏனய இயக்கங்கள் எல்லாமே புலிகள் தடைசெய்த நிலையில் இயக்கங்கள் புலிகளை குறிவைத்து சிறிலங்கா படைகளுடன் காட்டிக் கொடுத்தும் வவுணதீவு பாலத்தில் முகமூடி மனிதர்களாகவும் நின்றவர்கள்யார் தெரியுமா? ஆவர்கள் வேறு யாருமல்ல இப்போது தமிழ்தேசியவாதிகளான ஒரு சிலர்.
இவர்களின் காட்டிக்கொடுப்புடன்தான் 28வருடத்திற்குமுன் கொக்கட்டிச்சோலை இறால்பண்ணையில் 168 அப்பாவி உயிர்கள்காவு கொள்ளப்பட்டது, 1990ம் ஆண்டுசத்துருக்கொண்டான் படுகொலை,வந்தாறுமூலைபடுகொலை சந்திரா பாதர் படுகொல்லை வணசிங்காஅதிபர் படுகொலை என்று செய்த படுகொலைகள் கணக்குவழக்கு இல்லை.
இன்று அந்தப்படுகொலைக்கே அன்று காரணமானவர்களான தோழர்களை அழைத்தமை ஏன்?
இருந்தபோதும் மனச்சாட்சிக்கு இடம் கொடுக்காமையினால் ஒருவர் வரவில்லை கலந்து கொள்வதனை தவிர்த்திருந்தார். ஆனால் எது நடந்தாலும் பரவாயில்லை கட்டாயம்
செல்ல வேண்டும் மென்று சற்று தாமதமாகியாவது வந்தார் ஒரு தோழர்.
அவ்வாறு வந்திருந்தவரை அங்கு விளக்கேற்றி அரசியல் பேச விட்டசம்பவமானது இறந்த உயிர்களுக்குசெய்த மிகப்பெரிய துரோகம்.
யாருக்கு தெரியாவிட்டாலும் மட்டக்களப்பு மக்களுக்களுக்கு விளங்கும் இனிமேலாவது இறந்த எமது உறவுகளை துரோகிகளை கொண்டு அஞ்சலி செய்வதை கைவிடவேண்டும். இல்லையெனில் தேசியம் பேசுபவர்கள் தமழர்களுக்குச் செய்த கொலைகளையும் கொள்ளைகளையும் கொடுமைகளையும் ஆதாரத்துடன் எரிர் காலத்தில் வெளியிட தயங்கமாட்டோம் என்பதனை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.
நன்றி
அருட்தந்தை சந்திரா அறக்கட்டளை நிதியம்