உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் இவை. ஆனால், சம்பவம் நடைப்பெற்ற இந்தியாவிலேயோ ஒரு பத்திரிகையிலும் இச்செய்தி வரவில்லை

376

உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் இவை. ஆனால், சம்பவம் நடைப்பெற்ற இந்தியாவிலேயோ ஒரு பத்திரிகையிலும் இச்செய்தி வரவில்லை என்பதோடு, நடைப்பெற்ற சம்பவத்திற்கு எதிராக விசாரணை நடத்தவும் மறுக்கப்பட்டிருக்கிறது.

பி.ஜே.பி & சிவசேனா கோ கூட்டணி ஆட்சியில், மகாராஷ்ட்ராவில் தலித்துக்கள் தொடர்ச்சியாய் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவல் நிலையங்களில் தலித்துக்கள் தாக்கப்பட்ட புகார்கள் இங்கே அதிகரித்திருக்கின்றன. வெளிவராத படுகொலைகள் விசாரணை நடத்தப்படாமல் இருக்கிறது.

தமிழச்சி (Tamizachi)'s photo.

இந்த ‘மர்ம’ தேசத்திலேயே தேசிய கொண்டாட்டமாக கருதப்படும் தீபாவளி அன்று இந்தியா முழுவதும் குதூகூலமாக இருக்க மகாராஷ்ட்ராவில், ‘ஜவ்கடே கால்சா’ என்ற கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த ‘சஞ்சய் ஜாதவ்’ என்பவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் படு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். உடல்கள் பல பகுதிகளாக வெட்டப்பட்டு ஒதுக்குபுறமாக உள்ள கிணற்றுக்குள் வீசப்பட்டிருடிருந்தது கண்டுபிடிக்கப்பட்ட போது, “இச்சம்பவம் குறித்து புகார் வராததால் நாங்கள் விசாரணை நடத்தவில்லை” என்று அங்கிருந்த காவல்துறையினர் கூறுகின்றனர். இதன் பின்னணியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினரின் தொடர்பு இருப்பதாலேயே ஆளும் கட்சியும் காவல்துறையும் மெளனமாக இருக்கிறது.

இச்சம்பவங்கள் குறித்து அம்பேத்கர் பார்வையில் கூறவேண்டுமானால்,

“இந்தியாவுக்கு வெளியே உள்ள நாடுகளின் ஆதிக்க வர்க்கங்கள் சமூக விரோதமானவை அல்ல. மாறாக சமூக சார்பற்றவை. ஆனால் இந்தியாவிலோ நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. இங்கு ஆதிக்க வகுப்பு மூடப்பட்ட ஒரு காப்பிடமாக இருக்கிறது. அதன் மரபும், சமூக சித்தாந்தமும், சமூகக் கண்ணோட்டமும் அடிமட்ட வகுப்பினருக்கு விரோதமானவையாக இருக்கின்றன. அவை ஆழமாக வேரோடிப் போயிருக்கின்றன. அடிமைகளுக்கும், எசமானர்களுக்கும், சலுகை பெற்ற வகுப்பினர்களுக்கும் இடையேயான வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வேறு விதமாகச் சொன்னால் இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் கடைந்தெடுதத்த சமூக விரோதிகளாக இருந்து வருகின்றனர்.”

SHARE