நாமல் ராஜபக்ஷ பயன்படுத்திய அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு- 18 இலட்சம் ரூபாவை குத்தகை

391

 

இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள இரண்டு அதிநவீன சொகுசு பஸ் வண்டிகள் தனிப்பிட்ட தேவைகளுக்காகவே பயன்படுத்தப்பட்டமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களாக நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் கீழ் இந்த சொகுசு பஸ் வண்டிகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டன. இருந்த போதும் குறித்த பஸ் வண்டிகள் அமைச்சில் நிறுத்த வைக்கப்பட்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சின் போக்குவரத்துப் பிரிவு மாதாந்தம் இரண்டு பஸ் வண்டிகளுக்கும் 18 இலட்சம் ரூபாவை குத்தகையாக வழங்கி வருகிறது. அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் இயங்கும் வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த போதே அமைச்சில் எவரும் கண்டிராத இந்த பஸ் வண்டிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இரண்டு சாரதிகள் இந்த பஸ் வண்டிகளை வெளிவிவகார அமைச்சு வளாகத்தில் நிறுத்திச் சென்றதாகவும் அங்கிருந்த உயரதிகாரி ஒருவர் கூறினார். பொதுநலவாய உச்சி மாநாடு கொழும்பில் நடத்தப்பட்டது முதல் இன்று வரை மாதாந்தம் 18 இலட்சம் ரூபா குத்தகையாக வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடம் கேட்ட போது, இது தொடர்பில் தனது தெரியாது என மறுத்துள்ளார். சஜின் வாஸ் குணவர்த்தனவை விசாரணை செய்யும்படியும் தெரிவித்துள்ளார்.

SHARE