பல நபர்களை கடித்து குதறிய நாய்க்கு மரண தண்டனை: நீதிமன்றம் வினோத தீர்ப்பு

449

 

[
சுவிட்சர்லாந்தில் பல நபர்களை கடித்த நாய் ஒன்றிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.
Chalom என்ற ஏழு வயதான அந்த நாய் சுவிஸின் Vaud மண்டலத்தில் பல நபர்களை கடித்ததாக புகார்கள் வந்தது.

இதனை தொடர்ந்து அந்த பகுதி கால்நடை துறை அதிகாரிகள், Hovawart இனத்தை சேர்ந்த அந்த நாயை கருணை கொலை செய்யும் நோக்கில் பிடித்து அடைத்தனர்.

கால்நடை மருத்துவர்களின் இந்த முடிவை எதிர்த்து அந்த நாயின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல நபர்களை கடித்த அந்த நாய் பொதுமக்களுக்கு பெறும் ஆபத்தை விளைவிக்கும், ஈத்தனசியா(Euthanasia) என்ற முறையில் வலி இல்லாமல் ஊசி மூலம் அந்த நாயை கொல்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும் என முடிவு செய்து அந்த நாய்க்கு மரண தண்டனையை அளித்துள்ளது.

நாயின் உரிமையாளர் பல முறையீடுகளை செய்தபோதும் அவரால் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும், நாயை தனி அறையில் பூட்டி அடைத்து வைப்பதும் சிவிஸ் நாட்டின் கால்நடைகள் சட்டத்திற்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இத்தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அந்த நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

2012-ல் அந்த நாய் கடித்து முகத்திலும், கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கால், அந்த நாய் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE