ஒரு நடிகராக ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை அசத்தி வருகிறார் தனுஷ். வட சென்னையை தொடர்ந்து அசுரன் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார், இதிலும் வித்தியாசமான வேடங்கள் தான்.
இப்படங்களுக்கு நடுவில் சார்மிங் பாயாக தனுஷ் நடித்துள்ள படம் கௌதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா. பட வேலைகள் எல்லாம் முடிந்தும் ரிலீஸில் மட்டும் படம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஆனால் சமீபத்தில் இப்படம் ரிலீஸ் குறித்த வேலைகளில் தயாரிப்பாளர் இறங்கியுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது என்னவென்றால் இப்பட பாடல்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. காரணத்தை விசாரித்தபோது, தனியார் ஆடியோ நிறுவனத்துக்கு ஆடியோ உரிமத்தை விற்க தயாரிப்பு நிறுவனம் சார்பில் பேசப்பட்டு வருகிறது.
அதனால் ஒன்றாகா நிறுவனத்தின், யூடியூப் சேனலிலிருந்த, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வீடியோக்களை பிரைவேட் மோடில் மாற்றியுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது.