கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் இடம் பெற்றிருந்த இன்கேம் இன்கேம் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
இப்படத்தை தொடர்ந்து மறுபடியும் விஜய் தேவரகொண்டாவுடனேயே காம்ரேட் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தமிழிலும் கார்த்தியுடன் ஒரு புதிய படத்தில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கவுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தின் தலைப்பு இன்று (ஏப்ரல் 8) அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ஐகான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஸ்ரீராம் வேணு இயக்குகிறார். அல்லு அர்ஜுனின் 21-வது படம் இது.