திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் தழிழ் மாணவர்கள் சாதனை

189

கனடாவின் டெரன்டோ நகரில் நடைபெற்ற சிவா பைட்டர்ஸ் திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியில் ஜி.கே.எம்.ஓ (எஸ்.கே.ஏ.ஜ மற்றும் கே.ஓ.ஜே.எவ்) கழக மாணவர்கள் காட்டா போட்டியில் 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் குமித்தே போட்டியில் 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்களாக 12 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.

இதில் பயிற்றுனர் சென்செய்.சுகந்தன் காட்டாபோட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இவர்களுக்கான ஆரம்ப பயிற்சிகளை சென்செய்.ஜெயதாஸ், சென்செய்.ரெஜினோல்ட் ஆகியோரும் சுற்றுப்போட்டிக்கான சிறப்பு பயிற்சிகளை சிகான்டாய்.எஸ்.மனோகரனும் வழங்கியிருந்தார்.

ஜி.கே.எம்.ஓ கனடா கழக நிர்வாகக்குழு கடந்த மாதம் தங்களுக்கான சிறப்பு உயர்தர பயிற்சிகளை பெற்றுக்கொள்ள இலங்கையிலிருந்து அதன் தொழில்நுட்ப பணிப்பாளர் சிகான்.அன்ரோ டினேஸை அழைத்து மாணவர்க்கான பயிற்சி பட்டறைகளையும் பயிற்றுனர்களுக்கான தொடர்பயிற்சி பட்டறைகளையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE