வீடியோவால் ஒரே நாளில் டிரெண்டான விமான பணிப்பெண்

163

அமெரிக்காவின் Southwest Airlines இல் பணியாற்றி வந்த விமான பணிப்பெண் ஒருவர் தனது புதுவிதமான அறிவிப்பால் ஒரே நாளில் டிரெண்டாகியுள்ளார்.

அடில் எனும் அந்த பணிப்பெண் வழக்கம்போல விமானம் புறப்படுவதற்கு முன்னர் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுரையை வழங்கினார்.

ஆனால், பயணிகள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் அவர் திடீரென ராப் இசைபாணியில் அறிவுறுத்தல்களை பாட ஆரம்பித்தார்.

இதனை கேட்டு பயணிகள் உற்சாகமடைந்து பணிப்பெண்ணுடன் இணைந்து தாளம்போட்டுள்ளனர். மேலும் அந்த பெண்ணை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் விமான பணிப்பெண்ணை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

SHARE