
இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும்; பக்க விளைவுகளும் கிடையாது.
ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும். ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெய்யைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம்.
காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
செயற்கையான ரிமூவர்ஸில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆல்கஹால் இருந்தால்தான் காஜல், மஸ்காரா, ஐ ஷேடோவை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியும். ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
காஜல் கண்களுக்கு உட்பகுதில போடுவது ஒரு வகை, கண்களின் கீழ்ப் பகுதியில் போடுவது மற்றொரு வகை. கண்கள் பெரிதாக, அழகாகத் தெரிய வேண்டும் என நினைப்பவர்கள் கண்களின் உட்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும் காஜல் அப்ளைப் பண்ணும்போது ரொம்ப அட்ராக்டிவான அழகைக் கொடுக்கும். கண்கள் சிறியதாக இருப்பவர்கள், குட்டி லைன் மாதிரி காஜல் போடலாம். திக்கா போட்டால் கண்கள் இன்னும் ரொம்பச் சிறியதாகத் தெரியும்.