பொலிஸாரினால் நேற்றையதினம் தேடுவோர் பட்டியலில் சிலரது புகைப்படங்கள் வெளியிடப்பட்ட நிலையில் அதிலொரு பெண்ணொருவரின் புகைப்படம் தவறானதென பொலிஸார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடைய பெயரையும் புகைப்படத்தையும் பொலிஸ் தலைமையகம் நேற்றையதினம் வெளியிட்டுள்ளது.
மொஹமட் இவுஹயிம் சாதிக் அப்துல்லாஹ், பாத்திமா லதீபா மொஹமட் இவுஹயிம் சாஹிட் அப்துல்லாக், புலஸ்தினி ராஜேந்திரன் எனும் சாரா, அப்துல் காதர் பாதிமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகியோரின் பெயர்களையும் அவர்களின் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் பொலிஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் குற்றத்தடுப்பு பிரினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் 6 பேரின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
குறித்த சந்தேகநபர்களில் அப்துல் காதர் பாத்திமா காதியா என்பவர் அடையாளம் காணப்பட்டார். இந்நிலையில், தீவிரவாதிகளுடன் தொடர்பு என தேடப்படும் பெண் என்று பொலிஸார் ஊடகங்களுக்கு அந்தப்பெயருக்குரிய படமாககொடுக்கப்பட்டபடம் தவறாக பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த படம் வெளியிட்டு சிறிது நேரத்தில் புகைப்படம் தவறு என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட பெண் தனது முகப்புத்தகத்தில் இலங்கை பொலிஸார் தவறாக தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே எனது சமூகம் மோசமாக கண்காணிக்கப்படுகின்றது. இதனால் என்னையும் கண்காணிக்கத் தேவையில்லையென பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.