சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது .

255
கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ள சடலங்களில் 6 ஆண்களுடையது எனவும் 3 பெண்களுடையது எனவும் 6 சிறுவர்களுடையதெனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண்ணொருவரும் சிறு பிள்ளையொருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வித உயிர்ச்சேதங்களோ ஏற்படவில்லையென் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட சடலங்கள் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.

SHARE