பொதுவாக சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவதுண்டு.
தலைவலிகள் பெரும்பாலும், மூளையுறையில் அல்லது குருதிக்கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன.
தலைவலிக்கான பொதுவான காரணங்களாக, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, விழிக்களைப்பு, உடல்வரட்சி, குருதியில் சர்க்கரை குறைதல், நெற்றியெலும்புப்புழை அழற்சி (sinusitis) என்பவற்றைக் குறிப்பிடலாம்.
மேலும் ஒருசில உணவுகளை உட்கொண்டாலும், தலைவலியானது அதிகரிக்கும் என சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் அப்படி தலை வலியைத் தூண்டும் சில உணவுப் பொருட்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருமானால், சாக்லெட் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் சாக்லெட்டானது தலைவலியை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று.
- ஆல்கஹாலானது நேரடியாக தலைவலியை தூண்டாது. மாறாக அது உடலில் வறட்சியை ஏற்படுத்தி, அதன் காரணமாக தலை பாரத்தை ஏற்படுத்தும். அதனால் தான் ஆல்கஹால் அருந்திய பின்னர் தலையானது கடுமையாக வலிக்கின்றனது.
- MSG என்பது அடிமைப்படுத்தும் ஒரு பொருள். இந்த பொருளானது சைனீஸ் உணவுகளில் அதிகம் இருக்கும். எனவே சிலருக்கு சைனீஸ் உணவுகளை சாப்பிட்ட பின்னர், கடுமையான தலை வலியுடன், அடிவயிறும் வலிக்க ஆரம்பிக்கும். அத்தகையவர்கள் சைனீஸ் உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- காபியை அளவாக குடித்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடித்தால், அது கடுமையான தலைவலியை உண்டாக்கும்.
- பொதுவாக அதிக அளவில் குளிர்ச்சியுடன் இருக்கும் உணவுப் பொருட்கள் தலைவலியை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் ஐஸ் க்ரீம். அதிலும் இவற்றில் உள்ள அதிகப்படியான குளிர்ச்சியானது நரம்புகளை பாதித்து, தாங்க முடியாத தலைவலியை ஏற்படுத்தும்.
- சிலருக்கு தைரமின் என்னும் கெமிக்கல் ஒப்புக் கொள்ளாது. அத்தகையவர்கள் வாழைப்பழத்தை உட்கொண்டால், கடுமையான வலியுடன் கூடிய தலைவலியை சந்திப்பார்கள். எனவே ஒருமுறை வாழைப்பழத்தை உட்கொண்டு தலைவலி வந்தால், வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
- ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் ஒயின் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
- சோயா பொருட்களிலும் MSG இருப்பதால், அவற்றை உட்கொண்டாலும் சிலருக்கு தலைவலியானது தூண்டப்படும். குறிப்பாக MSG என்னும் பொருள் ஒப்புக் கொள்ளாதவர்கள், இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- உலர் பழங்களான உலர் திராட்சை மற்றும் அத்திப் பழம் போன்றவையும் தலைவலித் தூண்டும். அதிலும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு தான் இந்த உணவுப் பொருளானது தலைவலியை ஏற்படுத்தும்.
- ஈஸ்ட்டிற்கு சென்சிடிவ்வானவர்கள், பிரட், பன் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் இத்தகைய பொருட்களில் ஈஸ்ட் அதிக அளவில் இருக்கக்கூடும். இதனால் இவை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும்.