என்னையறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா. அஜித்திற்கு மகளாக நடித்து அத்தனை பேரையும் அசரவைத்தார். அப்பா மகள் காம்பினேஷன் மிக சிறந்த பொருத்தமாகிவிட்டது.
இதே போல விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் செண்டிமெண்டை முக்கியத்துவமாக கொண்ட கதையில் மீண்டும் அவரே நடித்திருந்தார். 100 நாட்கள் கடந்து வெற்றி பெற்ற இப்படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தது.
மேலும் இதில் அனிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது அவர் ஃபேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவர்ச்சி உடையில் ரேம்ப் வாக் செய்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/Anikhaofficial_/status/1122866503227809794