எவரெஸ்ட் சிகரத்தில் மூன்று ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

218

எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சுமார் மூன்று ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

மலையேறும் வீரர்கள் விட்டு சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள் போன்றவற்றை அகற்றும் பணியே அங்கு நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகள் எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

நேபாள அரசின் இந்த தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE