படப்பிடிப்பில் மயங்கி விழுந்த த்ரிஷா

101

கதையின் நாயகியாக நடித்த த்ரிஷாவுக்கு அப்படி நடித்த படங்கள் எல்லாமே தோல்வி முகமாகவே அமைந்தன. அதையடுத்து விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம், அவருக்கு ஹிட்டாக அமைந்தது. அதனால் த்ரிஷாவின் மார்க்கெட் மறுபடியும் சூடு பிடித்துள்ளது.

இந்தநிலையில், எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் ராங்கி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது த்ரிஷா திடீரென்று மயங்கி விழுந்ததாகவும், அதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவின.

ஆனால் இந்த செய்தியை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மறுத்துள்ளார். த்ரிஷாவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். ராங்கி படப்பிடிப்பில் அவர் தொடர்ந்து இரவு பகலாக நடித்து வருகிறார். த்ரிஷா பற்றி வெளியான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE