புர்கினியா பாசோ நாட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தேவாலயம் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினியா பாசோ, சவும் மாகாணத்தின் தலைநகர் டிஜிபோ அருகில் உள்ள சிறு நகரத்தில் உள்ள தேவாயலம் ஒன்றில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று தேவாயலத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் பாதிரியார், அவரது மகன்கள் இருவர் மற்றும் பிரார்த்தனைக்கு வந்த மூவர் என 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.