இலங்கையிலிருந்து சவுதி பிரஜைகளை வெளியேறுமாறு சவுதி அரேபிய தூதரகம்  ஆலோசனை

181

இலங்கையில் தங்கியுள்ள தனது நாட்டுப் பிரஜைகளை  இலங்கையிலிருந்து வெளியேறுமாறு, சவுதி அரேபிய தூதரகம்  ஆலோசனை வழங்கியுள்ளதாக, சவுதி அரேபிய தொலைக்காட்சி சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள சவுதி தூதரகமானது, ட்விட்டர் மூலம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாகவும் அத்தொலைக்காட்சிச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தனது நாட்டு பிரஜைகளுக்கு குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக சவுதி அரேபியத் தூதரகம் தெரிவித்தது.

SHARE