அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் படங்கள் எப்போதும் வரும் என வெறித்தனமான ஒரு ரசிகர் கூட்டம் காத்திருக்கின்றது.
அப்படியிருக்க தமிழ் சினிமாவில் தல என்றாலே அஜித் தான் என பலருக்கும் தெரியும், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனியையும் தல என்று தான் அழைப்பார்கள்.
நேற்று ஒரு படி மேலே சென்று ஸ்டேடியத்தில் அத்தனை பேர் முன்பும், தோனியை தல என்று சொல்ல, அவரும் இது தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள அன்பு என கூற, அரங்கமே அதிர்ந்தது.
தல அஜித் பிறந்தநாள் அன்று தோனியை தல என்று சொல்ல அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டி தீர்த்துவிட்டனர்.