கேரட் அல்வா செய்வது எப்படி

218
தித்திப்பான கேரட் அல்வா

தேவையான பொருட்கள் :

துருவிய கேரட் – அரை கிலோ
சீனி துளசி பவுடர் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 10
பசு நெய் – 5 டீஸ்பூன்
பசும் பால் – அரை லிட்டர்

தண்ணீர் – 100 மி.லி

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் கேரட்டை போட்டு அதனுடன் ஏலக்காய் தூள், பால் மற்றும் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் கீழே இறக்கிவிடவும்.

வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுக்கவும்.

அதனுடன் வேகவைத்த கேரட்டை கொட்டி கிளறிவிடவும்.

பின்னர் சீனி துளசி பவுடரை தூவி நன்றாக கிளறி 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.

கேரட் அல்வா தயார். (நிறத்திற்காக எந்த பவுடரும் பயன்படுத்தக்கூடாது)

ஆரோக்கிய பலன்: கேரட்டில் பீட்டா கரோட்டீன் இருப்பதால் கண்களுக்கு நல்லது. கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் மாலைகண் நோய் வராமல் தற்காத்துக்கொள்ளலாம். இருளிலும் கூட கண் நன்றாக தெரியும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

SHARE