தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவருக்கும் கோலிவுட்டின் தளபதி விஜய்க்கும் இடையே ஒரு பிணைப்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் மகேஷ் பாபு தெலுங்கில் நடித்து வெளியான ஒக்கடு, போக்ரி போன்ற படங்களின் தமிழ் ரீமேக்கில் விஜய் கில்லி, போக்கிரி என்ற தலைப்புகளில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்நிலையில் பலத்த எதிர்ப்பார்ப்பிற்கு இடையே மகேஷ் பாபுவின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் மகரிஷி படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது எனவும் தளபதி விஜய் அதில் நடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் சில நாட்களாக இணையங்களில் பரவி வருகின்றன.
ஆனால் நமது தளத்திற்கு கிடைத்துள்ள தகவலின்படி விஜய் தற்சமயம் எந்த பட ரீமேக்கிலும் நடிக்க சம்மதிக்கவில்லையாம். இது அத்தனையும் வதந்தி தானாம்.